நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி

 
tn

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.    

sarathbabu

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர்,  தமிழில் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார். இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

tn

இந்நிலையில் சென்னை தி.நகர் இல்லத்தில்  மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா துறையில் என்னை கிண்லடித்து பேச கூடிய அளவிலான நெருங்கிய நண்பர் சரத்பாபு;  திரைத்துறையில் எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குநரும் அவரை குறை சொல்லி பார்த்ததில்லை;  சரத்பாபுவுடன் நான் நடித்த அனைத்து படங்களும்  மிகப்பெரிய வெற்றி பெற்றன. திரைத்துறைக்கு வரும் முன்பே அவரை எனக்கு நன்றாக தெரியும் புகைப்பிடித்து உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவார். அவர் தற்போது இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார்.  முத்து ,அண்ணாமலை, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சரத்பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.