இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது - பிரகாஷ் ராஜ் காட்டம்

 
modi prakash

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் ‘GET OUT MODI' முழக்கத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில்  இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக-பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.  எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi ஹேஸ்டேக் திமுகவினரால் டிரெண்டிங் செய்யப்பட்டது.  


இந்த நிலையில், ‘GET OUT MODI' முழக்கத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.