தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்!
May 26, 2026, 16:50 IST1779794425000
இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் பிரபலமானார். லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து அவரது மூன்று படங்களில் 100 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனையும் படைத்தது. இந்த நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். பெண்களை மையப்படுத்தி உருவாக உள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிக்கிறார் இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

