செக் மோசடி வழக்கு- நீதிமன்றத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஆஜர்

 
பவர் ஸ்டார்

செக் மோசடி வழக்கில் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக பவர் ஸ்டார் ஆஜரானார்.

தேவிபட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக  கூறி ரூ.14 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டு கடனையும், வாங்கிய பணத்தையும்  தராததால்  பவர் ஸ்டார் சீனிவாசன் மீது இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முனியசாமி வழங்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணை இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் முனியசாமி தரப்பு வாதம் நீதிமன்றத்தில்  கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் தரப்பில் இன்று மற்றொரு வழக்கறிஞர் வழக்கில் வாதாடுவதற்காக ஆஜராகியுள்ளதால் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.