தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை- நடிகர் நாசர்

 
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை- நடிகர் நாசர்

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நடிகர் நாசர் தலைமையில் நடைபெற்றது.

Image

இதில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சங்க வளர்ச்சி பணிகள், கட்டிட பணிகள் உள்ளிட்ட ஏராளமான தீர்மாங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் மாரிமுத்து உட்பட கடந்த காலங்களில் உயிரிழந்த 64 சங்க உறுப்பினர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Image

தென்னிந்திய நடிகர் சங்க 67வது பொதுக்குழு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், “கோடி கோடியாக ஊதியம் வாங்குகிறீர்களே நடிகர் சங்க கட்டடத்தை கட்டமுடியாதா? என அனைத்து கதாநாயகர்களையும் பார்த்து கேள்வி கேளுங்கள். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க 40 கோடி ரூபாய் வரை செலவாகும். ரஜினி, கமல் போன்றவர்களிடம் நிதி கேட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடனை அடைக்க நட்சத்திரங்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை. நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும். அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான்  நடக்கும்.” என்றார்.