நடந்த பிரச்சனைகளுக்கு நான் மட்டுமே காரணமா? மலையாள சினிமாவை சிதைத்துவிட வேண்டாம்- மோகன்லால்

 
mohanlal-232

ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு ஒட்டுமொத்த கேரளா சினிமாவே பதில் கூற வேண்டி உள்ளது என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Mohanlal Press Meet: ദിലീപ് 'അമ്മ'യ്‌ക്ക് പുറത്തുതന്നെ, തെറ്റുകാരനല്ലെന്ന്  തെളിഞ്ഞാൽ തിരിച്ചെടുക്കും: മോഹൻലാൽ


மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த  நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான  பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர்.   இதனையடுத்து  பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அடுத்தடுத்து வரும் பாலியல் புகார்களால் மலையாள திரைப்பட நடிகர் சங்க( AMMA) தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். 

இந்நிலையில் கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மோகன்லால், “ஹேமா கமிட்டியில் இருந்து என்னையும் விசாரித்தார்கள். ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நானும் பதில் கூறி இருந்தேன். ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு நான் மட்டும் பதில் கூற வேண்டியது இல்லை. ஹேமா கமிட்டியின் புகார் மலையாள சினிமாவையே தகர்த்து எறியும் வகையில் உள்ளது. மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலைப்படுகிறேன். மலையாள திரைப்பட சங்காமான அம்மா சங்கம் மீது அவதூறு பரப்ப வேண்டாம். மலையாள திரையுலகம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாலியல் புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் கருத்து சொல்ல இயலாது. பொறுமையாக இருங்கள்...அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும். நடந்த பிரச்சனைகளுக்கு நான் மட்டுமே காரணமா? மலையாள சினிமாவை சிதைத்துவிட வேண்டாம். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் இணைந்தே ராஜினாமா செய்வது பற்றி முடிவெடுத்தோம். பாலியல் புகார்கள் மீது கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு, தேர்தல் நடத்தப்படும். அதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்” என்றார்.