"மாரிமுத்து மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்" - சசிகலா இரங்கல்

 
sasikala

மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும் என்று சசிகலாதெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.


சகோதரர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.