நடிகர் மாரிமுத்து உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்துவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் இருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுச் செல்லப்பட்டது.
திரைப்பட நடிகர், இயக்குனரும் மற்றும் சன் டிவி எதிர்நீச்சல் சின்னத்திரை நடிகருமான மாரிமுத்து இன்று காலை 8.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்பு திரைத்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது, அவரது பசுமலைத்தேரி கிராம மக்கள் மத்தியிலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது பூதவுடல் இறுதிச்சடங்கிற்காக சென்னையில் இருந்து மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுச் செல்லப்பட்டது. மாரிமுத்துவின் உடல் வந்ததும், அங்கு காத்திருந்த கிராம மக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கதறி அழுதனர்.மாரிமுத்துவின் உடல் நல்லடக்கமானது நாளை செப்டம்பர் 9ஆம் தேதி பிற்பகல் வேளையில் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.