நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து..!
Feb 14, 2026, 17:55 IST1771071915000
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்றிரவு 11 மணி அளவில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
சாஸ்திரி பவன் அருகே வந்தபோது, சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் துக்ளக்கிற்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே துக்ளக் மதுபோதையில் வாகனத்தை இயக்கினாரா, அல்லது வேகமாக இயக்கப்பட்டதால் கார் விபத்துக்குள்ளானதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், கடந்தாண்டு போதை பொருட்கள் பயன்படுத்திய குற்றத்திற்காக சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

