"நான் தான் த்ரிஷா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்" - மன்சூர் அலிகான்

 
tn

நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் , த்ரிஷாவால் பல மொழியில் என் போட்டோ செய்தி வந்தது. சினிமாவில் ரேப் சீன் எனில், நிஜமாக ரேப் செய்வதா? நடிகர் சங்கம் என்னிடம் எதுவும் விளக்கம் கேட்கவில்லை; நீதிமன்றத்தில் கூட எதிர் தரப்பின் விளக்கத்தை கேட்பார்கள். நடிகர் சங்கம் என் விளக்கத்தையே கேட்காமல், தீர்ப்பை எழுதியுள்ளது. நடிகர் சங்கம் தவறு செய்துவிட்டது. அதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

tn

மிகப்பெரிய இமாலய தவறை செய்துள்ளது; நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்; என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி செய்கிறது.நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாக பேசவில்லை; சர்ச்சை பேச்சு வீடியோ குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை; நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்; என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை பற்றி தெரியும்; தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது. நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றார்.

tn

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களைப் பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை; நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்;  என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்; எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது என்றார்.