சில வருடங்களுக்கு முன்பே கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடங்கினோம்- ஜாய் கிரிசில்டா

 
ஜாய் கிரிசில்டா ஜாய் கிரிசில்டா

சிலவற்றை தெளிவுபடுத்தவே இந்தப் பதிவு. சில பயணங்கள் சத்தமின்றி துவங்கி, நம்பிக்கையினால் வளரும். அப்படித்தான் நாங்களும் சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவியாக (Mr & Mrs ரங்கராஜ்) வாழ்க்கையை தொடங்கினோம் என மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

காதலியை நேற்று கரம்பிடித்த மாதம்பட்டி ரங்கராஜ்.. இன்று 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு..!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞராக இருந்து வரும் ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.  அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பல முக்கியஸ்தர்களின் இல்ல விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் சர்வீஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் என்கிற அளவிற்கு பாப்புலரான நபராகவும் இருந்து வருகிறார்.  ரங்கராஜுக்கு  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதி என்பவருடம் திருமணமாகி  இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்த மறுநாளே ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்தது  சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாகியது. 

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில், “சிலவற்றை தெளிவுபடுத்தவே இந்தப் பதிவு. சில பயணங்கள் சத்தமின்றி துவங்கி, நம்பிக்கையினால் வளரும். அப்படித்தான் நாங்களும் சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவியாக (Mr & Mrs ரங்கராஜ்) வாழ்க்கையை தொடங்கினோம். அன்புடனும் கவுரவத்துடனும் முழு மனதுடனும் மரியாதையுடனும் பயணத்தை தொடங்கிய நாங்கள், இந்த வருடம் ஒரு குட்டி நபரை வரவேற்க நன்றியுடனும் அன்புடனும் காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.