"நான் நினைச்சே பார்க்கல.. கையும் ஓடல, காலும் ஓடல! ரொம்ப சந்தோசம்"- முதல்வருக்கு கிங் காங் நன்றி

 
ச் ச்

முதலமைச்சர் சார் என்னுடைய வீட்டிற்கு வந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என நடிகர் கிங்காங் கூறியுள்ளார்.

நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல்  தலைவர்கள் பங்கேற்பு - Vikatan

தனது மகள் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் கிங்காங், “எல்லோருக்கும் சென்று மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்தேன். அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்து நேரில் பத்திரிக்கை வைத்தேன். ஆனால் திருமணத்தன்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. முதலமைச்சர் வரார் என திடீரென சொன்னதும் எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. மிகவும் சந்தோசமாக இருந்தது.


என் மகள் கல்யாணத்தன்று அவர் தஞ்சாவூரில் ஒரு பங்க்ஷனில் இருந்தார். பிறகு அந்த ஃபங்ஷனை முடித்துவிட்டு திருச்சி வந்து அங்கிருந்து பிளைட்டில் சென்னைக்கு வந்து என்னுடைய மகள் கல்யாணத்திற்கு வந்திருக்கிறார். அவர் உருவத்தை பார்த்து வரவில்லை, உண்மையான மனசை பார்த்து வந்திருக்கிறார். முதலமைச்சருக்கு நானும் என்னுடைய குடும்பமும் நன்றி சொல்கிறோம். உண்மையிலேயே சாதாரண மக்களின் ஒருவராக முதலமைச்சர் இருக்கிறார் என்று நிரூபித்திருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.