“என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம்”- இயக்குனர் கஸ்தூரி ராஜா

 
a

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம்? என இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். 

தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை சாலிக்கிராமத்தில் கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனர் கஸ்தூரி ராஜா பங்கேற்று பேசினார். கல்வி தான் வாழ்வின் பலம் என பேசிய அவர், இன்றைய காலகட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பேசினார். இளம் பருவத்திலேயே மாணவர்களுக்கு காதல் வந்துவிடுகிறது. கவினின் தூர் மரணத்துக்கு காரணம் காதல் எனும் கொடிய செயல். படிக்க சென்றால் படிக்க மட்டுமே செய்ய வேண்டும். வேலைக்கு சென்றால் வேலையை மட்டுமே செய்ய வேண்டும். திருமணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள். பெற்றோரின் வலியை எந்த பிள்ளைகளும் உணர்வதில்லை, அதற்காக காதல் தவறு என்று சொல்லவில்லை. என் வாழ்க்கை தடம் புராண்டாதற்கு காதல் தான் காரணம். வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வது மட்டுமே காதல் பின்னோக்கி இழுத்தால் அது காதல் அல்ல என கஸ்தூரி ராஜா கூறினார். 

பெண்கள், ஆண்களை மீஞ்சி மது குடிக்கிறார்கள் என்றும், கடையில் நின்று மது வாங்குகிறார்கள் என்றும். வேதனையை வெளிப்படுத்தினார். பள்ளி சிறுவர்களிடையே போதை கலாச்சாரம் உருவாக்கி விட்டது, ஆண்களை விட பெண்களுக்கு அறிவு பலம் அதிகம்,அவர்களுக்கு பொறுப்பு அதிகம், பெண்கள் தடம் மாறி போகக்கூடாது என கூறுகிறேன். நான் நல்ல நிலையில் இருக்க என் மனைவி தான் காரணம் என்றார்.சென்னையில் போயஸ் கார்டன் ஒரு பவர் புல்லனா இடம், அந்த இடத்திற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. போயஸ் கார்டனில் இருந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா,சென்னையில் பவர் புல்லனா இடம் கோபாலாபுரம் தான் என்றார். கலைஞர் அங்குதான் வாழ்ந்தார், அது ஒளி பிறந்த இடம் என கூறினார். தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி குறித்து பேசிய அவர்,யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம்? என்றார். விவசாயம். தான் நாட்டின் முதுகெலும்பு என பேசிய அவரிடம்,விவசாயத்தை விட விளையாட்டு கடினம் என பேசிய விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. விவசாயம் தான் உயிர் நாடி என்ற அவர், சோறு சாப்பிட்டால் தான் விளையாட தெம்பு கிடைக்கும் என்றார்.