நடிகர் சங்கத்திற்கு விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ரூ. 1 கோடி கொடுத்தார் - கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, “நடிகர் சங்க கடனை அடைக்க கலை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். கலைநிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் சேர்த்து நடிப்பதாக உறுதி அளித்துள்ளனர். பெண்களுக்கான அச்சுறுத்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்கப்படும். எந்த புகாராக இருந்தாலும் தைரியமாக அந்த குழுவில் பெண்கள் சொல்லலாம். பெண்களுக்கு உதவ உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலியல் விவகாரம் தொடர்பாக தைரியமாக புகார் அளிக்கலாம், தலைவராக நடிகை ரோகிணி உள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ரூ. 1 கோடி கொடுத்தார். உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், நெப்போலியன் உள்ளிட்டோரும் நிதி வழங்கியுள்ளனர். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது என்ற நிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் நிதி சுமை கூடுதலாக அதிகரித்துள்ளது” எனக் கூறினார்.