"இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி" - நடிகர் கார்த்தி ட்வீட்!!

 
karthi-f


மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததுடன், டெல்லியில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா  உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்ட களத்தில் பல விவசாயிகள் பலியாகினர்.  இந்த சூழலில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

modi

இதுகுறித்து காணொளி வாயிலாக பேசிய அவர், நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம்” என்றார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்ததுடன், நாடு முழுவதும் விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி தீர்த்தனர். 

karthi

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய  வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என்று பதிவிட்டுள்ளார். 


முன்னதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது பாஜக அரசு பல்வேறு மறைமுக தாக்குதல்களை நடத்தியது. சாலைகளில் பள்ளம் தோண்டி, ஆணிகள் பதித்தது,  போலீசை விட்டு தாக்கியது,  விவசாயிகள் மத்தியில் காரை ஏற்றி கொலை செய்தது என பல்வேறு நெருக்கடிகளை தாண்டி தற்போது விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.