எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நினைவு தினம் - கமல்ஹாசன் புகழஞ்சலி

 
kamalhasan-34

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நினைவு தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

மூத்த தலைமுறை எழுத்தாளரான தி.ஜானகிராமனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஜானகிராமனின் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஜானகிராமனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 


இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இலக்கியம் என்பது எல்லோருக்கும் புரியாது என்கிற எண்ணமே எழாமல் எளிமையின் எல்லைக்கே சென்று எழுதியவர் தி.ஜானகிராமன். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள், உயிர்த்தேன் என நாவல்களாகட்டும், மனதின் அடியாழத்தில் பதிந்துவிடும் நடையழகோடு கூடிய சிறுகதைகளாகட்டும் தனது என்கிற முத்திரையைத் தவறாமல் பதித்த மூத்த தலைமுறை எழுத்தாளரான தி.ஜானகிராமனின் நினைவுநாள் இன்று. இந்த நிமிடமும் கால மாற்றத்தால் மதிப்பு மாறிவிடாத அவரது உலகளாவிய படைப்புகளை வாசிப்பதே நாம் அவரை நினைவுகூரும் நல்ல வழி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.