பெர்ப்ளெக்ஸிட்டி CEO அரவிந்த் ஸ்ரீநிவாஸனை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!

 
kamal kamal

 அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் சான் பிரான்சிஸ்கோவில் பெர்ப்ளெக்ஸிட்டி CEO அரவிந்த் ஸ்ரீநிவாஸனை சந்தித்தார். 

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்த போதிலும், சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் ஓவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்கிறார். இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பம் குறித்து கற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.  அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடந்து வரும் சினிமா தொடர்பான சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார்.  


இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் சான் பிரான்சிஸ்கோவில் பெர்ப்ளெக்ஸிட்டி CEO அரவிந்த் ஸ்ரீநிவாஸனை சந்தித்தார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,  பெர்ப்ளெக்ஸிட்டி தலைமையகத்திற்கு நான் சென்றதால் ஈர்க்கப்பட்டேன். அங்கு  பெர்ப்ளெக்ஸிட்டி CEO அரவிந்த் ஸ்ரீநிவாஸனை சந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.