தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும் - கமல்ஹாசன் வாழ்த்து

 
kamal-haasan-344

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் ஐப்பசியின் மழைப்பொழிவில் அகமெல்லாம் மலரட்டும் ஆகாயம் பார்த்திருக்கும் அருமைநிலம் செழிக்கட்டும் தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.