வாழ்த்து தெரிவித்த அனைவரும் என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள் - கமல்ஹாசன் நன்றி!

 
kamalhasan-34

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 

உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த நிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், எத்தனையெத்தனை இதயங்கள்... அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.