இசையமைப்பாளர் தேவா மறைவிற்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல்..!

 
1

இசையமைப்பாளர் தேவா மறைவிற்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் தேவா மறைந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தனது X தள பக்கத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாக சிரிக்கும் இயல்பும் கொண்ட தேவாவுடன் 'அவ்வை சண்முகி', 'பம்மல் கே. சம்பந்தம்', 'பஞ்சதந்திரம்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய காலத்து நினைவுகள் கலகலப்பாக எழுகிறது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை அவர் கூறியுள்ளார்.