மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57. இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2023
ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/ryN5EmskHD
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன்.
ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.