விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி மனம் விட்டு பேச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

 
jeyam ravi

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி  மற்றும் அவரின் மனைவி ஆர்த்தியை மனம் விட்டு பேச வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.  

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக முடிவு செய்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். 

இந்த நிலையில், விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி  மற்றும் அவரின் மனைவி ஆர்த்தியை மனம் விட்டு பேச வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என மத்தியஸ்தர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சமரச தீர்வு மையத்தில் நடிகர் ஜெயம்ரவி மற்றும் மனைவி ஆர்த்தி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மனம் விட்டு பேச அறிவுறுத்திய நீதிமன்றம் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.