“பெரிய திரைப்பட்டாளத்துடன் தவெகவில் இணையப் போகிறேன்”- நடிகர் ஜீவா ரவி
Dec 15, 2025, 17:40 IST1765800636413
சினிமா குழுவுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய போகிறேன் என நடிகர் ஜீவா ரவி தெரிவித்துள்ளார்.
சினிமா குழுவுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய போகிறேன். துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள், உதவி இயக்குநர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் என பெரும் சினிமா பட்டாளத்துடன் தவெகவில் இணைவேன். நானாக யாரையும் கூப்பிடவில்லை. பதவி வேண்டாம், தலைவர் விஜய்யுடன் களப்பணி செய்தால் போதும் எனக் கேட்டு அவர்களாகவே முன்வருகின்றனர். ஒருவர் கட்சியில் சேர வேண்டும் என்றால், தலைவர் விஜய், N.ஆனந்த், செங்கோட்டையன் மூவருமே அவர்களின் டிராக் ரெக்கார்டுகள், பின்புலம், அவர்களால் என்ன நன்மை என அனைத்தையும் பார்த்த பின்பே கட்சியில் இணைப்பார்கள். அவ்வளவு சர்வசாதாரணமாக யாரும் தவெகவில் நுழைந்துவிட முடியாது” என்றார்.


