நடிகர் ஜெய்-க்கு ரகசிய திருமணம்..? நடிகையின் கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்..!

 
1

விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய்.பின்னர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் முதன்மை நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தார்.அந்த படத்தில் அவரது நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்தப் படத்தில் அழகராக தனது பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்தார். விளைவு அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.அட்லி இயக்கத்தில் நடித்த ராஜா ராணி திரைப்படம் இவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. 

சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத நடிகர் ஜெய், ஏற்கனவே நடிகை அஞ்சலியுடன் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் நடித்த போது.. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது.பின்னர் அஞ்சலி இருவரும் நண்பர்கள் மட்டுமே என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, பிரபல இளம் நடிகையான பிரக்யா நக்ராவுடன் ஜோடியாக ஜெய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரக்யா இந்த புகைப்படத்தில் தாலியோடு இருக்க... ஜெய் தன்னுடைய கையில், பாஸ்போர்ட் வைத்துள்ளார். திருமணமான கையேடு ஹனி மூன் செல்வது போல் உள்ள இந்த புகைப்படத்திற்கு கீழே கடவுளின் ஆசியோடு புதிய வாழ்க்கை ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாபியைச் சேர்ந்த பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’, ‘என்4’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். 

ஜெய்யும் இந்தப் புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் இருவருக்கும் திடீர் திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர். இது நிஜத்தில் நடந்த திருமணமா அல்லது பட புரமோஷனா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1