தவெக இடைத்தேர்தல் பரப்புரைக்காக வந்த நடிகர் ஜெய்க்கு உற்சாக வரவேற்பு..!
Sep 30, 2026, 12:27 IST1790751462946
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இன்று (செப்.30) வருகை தந்த திரைப்பட நடிகர் ஜெய்க்கு, அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் அவரிடம் தளபதி விஜய்யை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிய பொதுமக்கள், அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வந்த நடிகர் ஜெய்க்கு, ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு#tvk #cmvijay #dharapuram #ByElection #ElectionCampaign #NewsUpdate #LiveUpdate #puthiyathalaimuraitv pic.twitter.com/ieXhfuMXHo
— PttvOnlinenews (@PttvNewsX) September 30, 2026

