கில்லி பட நடிகர் காலமானார்..! திரையுலகினர் இரங்கல்!
2004ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமான 'கில்லி'.ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் பொழுதுபோக்கு படைப்பான கில்லி விஜய் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.வித்யாசாகர் இசையில் அப்படிப் போடு, அர்ஜுனர் வில்லு ஆகிய பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் வைப் செய்யும் பாடல்களாக உள்ளது.
இந்நிலையில் 'கில்லி' படத்தின் தொடக்க காட்சியில், "ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி டா" என்ற புகழ்பெற்ற வசனத்தைப் பேசும் காட்சியில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் சிவா காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கில்லி' மட்டுமின்றி 'குருவி', 'மதுர' உள்ளிட்ட விஜய்யின் பல வெற்றிப் படங்களில் இவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கில்லி படத்தில் விஜய்யுடன் ஓப்பனிங் காட்சியில் நடித்தவர் நடிகர் சிவா. இவரை பார்த்தது 'இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயுமா எனக்கு பயம் கிடையாது டா, ஏன்னா ஆல் எரியலையும் ஐயா கில்லி டா' என விஜய் வசனம் பேசுவார்.
இந்த நிலையில், விஜய்யுடன் இந்த காட்சியில் இணைந்து நடித்திருந்த நடிகர் சிவா காலமானார். இவருடைய மரண செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

