மகளிரணியினருக்கு ரூ.1.5 கோடி செலவழித்த நடிகர் தனுஷ்..! தலா 20 கிராம் வெள்ளி விளக்கு பரிசளிப்பு..!
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2000 மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நடிகர் தனுஷ் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடையே எழுந்திருந்தது. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பின்னர் நடக்கும் முதல் மகளிர் கூட்டம் என்பதால் பெண் நிர்வாகிகள் மிகுந்த ஆவலுடன் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
பங்கேற்ற 3000 மகளிர் நிர்வாகிகளுக்கு தனுஷ் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு ஒன்றை பரிசளித்து இருக்கிறார். மகளிர் அணியினர் தனித்தனியே போட்டோவும் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. விழா மேடையில் அவர் என்ன பேசினார் என்பதை பெண் நிர்வாகிகள் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது; அவர் எங்கள் எல்லாருக்கும் பரிசாக விளக்கை கொடுத்திருக்கிறார். அதை நாங்கள் தினமும் ஏற்றுவோம். பெண்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும், பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். நடிகர் தனுஷ் அரசியல் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் அறிவுரை மட்டுமே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1.5 கோடி :
தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் 3,000 பேருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.பரிசளிக்கப்பட்ட காமாட்சி விளக்கின் பின்புறம் தாமரை சின்னம் பதிக்கப்பட்டுள்ளது.நிர்வாகிகள் 3,000 பேருக்கு தலா 20 கிராம் எடை கொண்ட வெள்ளி விளக்கு பரிசளிப்பு.ஜிஎஸ்டி உட்பட ஒரு விளக்கின் விலை ரூ.5000 என்றால் 3,000 பேருக்கு பரிசளிக்க தனுஷ் ரூ.1.5 கோடி செலவழித்துள்ளார்

