நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!

 
1 1

 புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம் செய்தார். 

கோயில் வளாகத்துக்குள் அவர் அடியெடுத்து வைத்த உடனே பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டதால் லேசான பரபரப்பு நிலவியது. தனுஷ் ஆலயத்தின் பிரதான சன்னதிகளில் வழிபாடுகளைச் செய்து சாமி கும்பிட்டார். நடிகர் தனுஷ் கோவிலுக்கு வந்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவருடனேயே கோவிலுக்குள் வந்தனர்.

ரசிகர்கள் பலர் தனுஷுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். தனுஷும் முகம் சுளிக்காமல் செல்பி எடுக்க அனுமதித்தார். அதே சமயம் கூட்டம் கூடியதால் சற்று வேகமாக நடந்து உள்ளே போய் விட்டார்.