அரசியல் களத்திற்கு முன்னோட்டமா? பெயரை மாற்றிய தனுஷ்

 
s

நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.


நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று, முதலமைச்சரானதையடுத்து, மற்ற நடிகர்களும் அரசியலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திரைப்பட நடிகர் தனுஷின் ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக 'நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் முக்கியக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் திட்டமிடல்கள் அவரது தரப்பில் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த நற்பணி இயக்க மாற்றம் குறித்த அறிவிப்பு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.