நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்!

 
rajini rajini

நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் ரசிகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் தலைவர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒரே ஒரு சூப்பர்..சூப்பர்ஸ்டார்.. மாஸ் மற்றும் ஸ்டைலை மறுவரையறை செய்தவர் நீங்கள் என குறிப்பிட்டுள்ளார்.