த்ரிஷா குறித்த நடிகர் மன்சூர் அலிகான் கருத்துக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்

 
Chiranjeevi Konidela

நடிகரி த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து கண்டிக்கதக்கது என மலையாள நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார். 

லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அதாவது தான் கூறிய கருத்தை தவறாக சித்தரித்து சிலர் வெளியிட்டு வருவதாக கூறியிருந்தார்.  மன்சூர் அலிகானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், நடிகரி த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து கண்டிக்கதக்கது என மலையாள நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார். 
த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தது. இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பானதாக இருக்கிறது. இந்தக் கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் வக்கிரத்தில் துவண்டு விடுகிறார்கள். நான் உடன் நிற்கிறேன். த்ரிஷாவுக்கும் இதுபோன்ற கொடூரமான கருத்துக்களுக்கு உள்ளாகும் ஒவ்வொரு பெண்ணுக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.