நடிகர் செவ்வாழை ராசு காலமானார்!

 
செவ்வாழை ராசு

பருத்திவீரன், மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த  நடிகர் செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமானார்! அவருக்கு வயது 70.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘பருத்திவீரன்’படத்தில்  ‘பிணம் தின்னி’ என்னும்  கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலமானவர் செவ்வாழை ராசு. இவை தவிர பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ளார்.  ‘கிழக்குச் சீமையிலே’, ‘மைனா’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக  பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நடிகர் செவ்வாழை ராசு,  இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70.  அவரது உடல்  சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மறைந்த நடிகர் செவ்வாழை ராசு அவர்களுக்கு  மூன்று மகன்கள் உள்ளனர். செவ்வாழை ராசு மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.