மன்னிப்பு கேட்டார் நடிகர் படவா கோபி... என்ன ஆச்சு..?

 
1 1

'நீயா நானா' நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், தெருநாய்கள் ஒரு சமூகப் பிரச்சனையா அல்லது அவற்றை ஆதரிக்க வேண்டுமா என்பது குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் படவா கோபி, நாய்களுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சில கருத்துகள், தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது போல அமைந்தன.சமூக வலைதளங்களில் இந்த விவாதத்தின் வீடியோ பரவியதும், பலரும் படவா கோபிக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகர் படவா கோபி மன்னிப்பு கேட்டார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "டிவி நிகழ்ச்சியில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என் கருத்தை முழுமையாக நிகழ்ச்சியில் தெரிவிக்கவே விடவில்லை. நாய்களால் பாதிக்கப்பட்டோரின் மனநிலையிலும், நாய் அபிமானிகளின் எண்ணத்தை பிரதிபலிக்கவும் பேசினேன்" என்று தெரிவித்தார்.நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.