“நடு ரோட்டில் படுத்து கிடந்தேன்... ஆனால் இன்று! முதலமைச்சருக்கு நன்றி”- நடிகர் பாபா லட்சுமணன்

 
ச்

நடிகர் பாவா லட்சுமணன் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்தார்.  இதனை அறிந்த அமைச்சர் ராஜ்மோகன் அவரை சந்தித்து தனது எம்.எல்.ஏ குடியிருப்பை அவருக்கு வழங்கினார்.

Image

எம்.எல்.ஏ குடியிருப்பில்  குடி பெயர்ந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாபா லட்சுமணன், “எனது வீடியோவை பார்த்துவிட்டு தான் முதலமைச்சர் விஜய், அமைச்சர் ராஜ் மோகன் அவர்களை அனுப்பி எனக்கு உதவி செய்ய சொன்னார். நடுரோட்டில் படுத்து கிடந்தேன் இன்று மரங்களுக்கு நடுவே ஒரு வீட்டில் குடியிருக்கிறேன் என்றால் முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றிகள். அவர் இன்று முதலமைச்சராக ஆனதால் தான், இன்று எனக்கு வீடு கிடைத்திருக்கிறது. விரைவில் என்னை முதலமைச்சர் விஜய்யை பார்க்க அழைத்துச் செல்வோம் என்று அவருடைய ஓட்டுநர் கூறியிருக்கிறார். எந்தக் கூட்டணியும் இல்லாமல் 108 இடங்களை பிடித்திருக்கிறார், அவருடைய வெற்றியை கண்டு நிறைய பேரு 'எப்படி இவர் முதலமைச்சர் ஆனார்' என்று திகைத்துப் போய் இருக்கிறார்கள் நான் பெயர் சொல்ல விரும்பவில்லை ! ” என்றார்.