மாரிமுத்து மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு - இயக்குநர் திருச்செல்வம் உருக்கம்

 
tn

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகரும்,  இயக்குனருமான மாரிமுத்து. இவர் இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்படவே சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

tn

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரிமுத்துவின் மரணம் திரையுலகினர்  மட்டுமன்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

tn

இந்நிலையில் மாரிமுத்துவின் திடீர் மரணம் குறித்து எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் கூறியுள்ள போது,  இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.  இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு,  படப்பிடிப்புக்கு வருவதாக சொல்லி இருந்தார்.  இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி ஆகி இருந்தால் அது வேறு.  ஆனால் அவரது மரணம் தற்போது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது . அவரது குடும்பத்தினர், எதிர்நீச்சல் டீம் ,ரசிகர்கள் அனைவருக்கும் இது மிகப்பெரிய இழப்பு  என்றார்.