27 வயதில் காலமான பிரபல நடிகை... தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்
‘7 Hours to Go’, ‘The Final Exit’, ‘Ghost' உள்ளிட்ட பாலிவுட் படங்கள் மூலம் பிரபலமடைந்த நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் தனது 27வது வயதில் காலமானார். ஓராண்டுக்கும் மேலாக உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த ஜூலை 15ஆம் தேதி அதிகாலை உறக்கத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். '7 Hours to Go', 'The Final Exit', 'Ghost 2' ஆகிய ஹிந்தி படங்களிலும், நவீன் சந்திரா நடிப்பில் 2022-ல் வெளியான 'Thaggedele' என்ற தெலுங்கு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இவர் கவனம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனன்யா ராஜ் இறந்து ஒரு மாதம் கழித்து, அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்புகளை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மறைந்த நடிகையை "உறுதியான மனப்பான்மை கொண்ட பெண்" என்று வர்ணித்த அவரது குடும்பத்தினர், அனன்யா ராஜ் ஒரு ராணியைப் போல வாழ்ந்ததாகக் கூறினர்

