சிறுவன் கவலைக்கிடம்...நடிகர் அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் சிக்கல்!

 
allu arjun

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது, ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சிறுவனின் தாய் ரேவதி ஏற்கனவே உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜ், மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 'புஷ்பா-2' படத்தின் முதல் நாள் காட்சி விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தெலங்கானா போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.