"கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டுமே காரணமல்ல"- நடிகர் அஜித்குமார்

 
ச் ச்

கரூர் சம்பவத்திற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள் என நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் அஜித்குமார், “கரூர் சம்பவத்திற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல, நாம் அனைவரும் அதற்கு பொறுப்புதான். நமக்கான கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கூட்டத்தை கூட்டுவதில் வெறி கொண்ட ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம். இது முடிவுக்கு வரவேண்டும். கிரிக்கெட் போட்டிக்கும் கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கே இதெல்லாம் நடக்காது. ஏன் இந்த துயரம் தியேட்டரில் மட்டுமே நடக்கிறது. ஏன் சினிமா பிரபலங்களுக்கு மட்டும் நடக்குது? இது முழு சினிமா துறையையும் தவறான முறையில் பிம்பப்படுகிறது. 


எனக்கு ஆரம்பத்துல தமிழ் சரியாக பேச தெரியாது. உச்சரிப்புல வித்தியாசம் இருந்துச்சு. சரிசெய்ய நான் உழைச்சேன். சினிமாக்கு வந்த புதுசுல என்னோட பேர மாத்திக்க சொன்னாங்க. எனக்கு வேற பேரு வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டேன். இந்த அஜித்தோட வளர்ச்சி ஒரே நாளுல வந்தது கிடையாது. பல சவால்கள கடின உழைப்பு, விடாமுயற்சி மூலமா தாண்டி வந்தேன். குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கம் இன்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். அனைத்து உழைப்பும் எங்கள் மீது வைத்துள்ள ரசிகர்களின் அன்புக்காகத்தான்” என்றார்.