“விஜய் தனது பிஸியான ஷெட்யூலிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார்”- அஜித்

 
அஜித்

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் ‘MICHELIN LE MANS CUP கார் பந்தயம் லண்டனில் நடைபெறும் நிலையில், வரும் 10 முதல் 16-ம் தேதி வரை லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட உள்ளார். சில்வர்ஸ்டோனில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் அஜித்தின் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் கண்டு ரசிக்கவுள்ளார்.


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், “முதல்வர் விஜய் தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி எங்களைச் சந்திக்க வந்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக நாங்கள் திரையுலகில் சக ஊழியர்களாக இருந்து வருகிறோம், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரும் அவரது குழுவினரும் மோட்டார் பந்தயம் உட்பட, விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக நிறைய செய்து வருகின்றனர். இந்த அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு என்ன தேவை என்பதைப் பார்க்க அவர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்த நிகழ்வுகள் இந்தியாவிற்கு வர வேண்டும், நாம் அனைவரும் இந்தியாவில் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்தும் இந்தியாவில் வர வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.