நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!

 
1

நடிகரும், கார் ரேசருமான அஜித் குமாரின் தாயார் மோகினி (வயது 89) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் அஜித் குமார் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மோகினி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்த நடிகர் அஜித்குமார் தனது தயார் இறப்பு செய்தி கேட்டு அவசரமாக சென்னை திரும்பினார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஜித் குமார் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று காலை 8.30 மணி அளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.