நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்குமார்

 
ajith

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித் குமார், இன்று மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார்.

ajith 62

நடிகர் அஜித்குமார் நேற்றுமுன்தினம்   சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதால் மைனர் ஆப்ரேஷன் செய்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் வீக்கம் இருந்ததால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவுத்துள்ளார்.

ajith
வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு அவர் நிச்சயம் செல்வார் எனவும் தெரிவித்துள்ளார்.