தாயின் உடலை சுமந்து சென்ற நடிகர் அஜித்குமார்

 
ச்

சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு மறைந்த தாயின் உடலை நடிகர் அஜித்குமார் சுமந்து சென்றனர்.

நடிகரும், கார் ரேசருமான அஜித் குமாரின் தாயார் மோகினி (வயது 89) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் அஜித் குமார் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மோகினி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினிமணி உடல் இறுதிச்சடங்கிற்கு பிறகு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.