SRH வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார்!
Apr 4, 2024, 09:38 IST1712203711783
நடிகர் அஜித் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர் நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பந்துவீச்சாளருமான நடராஜன் இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து நேற்று இரவு நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தற்போது டிரண்டாக்கி வருகின்றனர்.