#BREAKING நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!

 
tn

நடிகரும் , இயக்குநருமான  பிரதாப் போத்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 70

tn

நடிகர் ,இயக்குனர், எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளராகிய பன்முக தன்மையை கொண்ட பிரதாப் போத்தன் 1980 இல் தனது திரைப்பட திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். தமிழ், தெலுங்கு ,மலையாளம் , இந்தி ஆகிய மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார்.  சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது , சிறந்த அறிமுக இயக்குனர் படத்திற்கான இந்திரா காந்தி விருது,  கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.  அத்துடன் மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா ,வெற்றி விழா ,மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி ,லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். 

tn

நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து 1986 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.  அத்துடன் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு மணந்த  இவர் 2012 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் , நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டதாக தெரிகிறது. பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.