காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் - தெலங்கானா அதிகாரிகள் நேரில் ஆய்வு

 
tn

காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள தெலங்கானா அதிகாரிகள் தமிழ்நாடு வருகை புரிந்தனர்.

tn

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,  முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கடந்த 25ஆம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அறிய தெலங்கானா அதிகாரிகள் வருகை புரிந்தனர்.  தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் ஸ்மிதா சபர்வால் தலைமையில்  5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள உணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு தயாரிப்பு, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் முறைகளை பார்வையிட்டனர்.