கள்ளச்சாராய விவகாரம் - செங்கல்பட்டு டிஎஸ்பி மணிமேகலை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை..

 
கள்ளச்சாராய விவகாரம் - செங்கல்பட்டு டிஎஸ்பி மணிமேகலை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை..


 செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி  புதிய டி.எஸ்.பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட  8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.  

கள்ளச்சாராயம்

இந்த விவாகாரத்தை அடுத்து மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதேபோல் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  இந்நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி  புதிய டி.எஸ்.பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.