``ஜூலை 8..'' - நாள் குறித்த நீதிமன்றம்... செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி உத்தரவு

 
``ஜூலை 8..'' - நாள் குறித்த நீதிமன்றம்... செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 8ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

senthil balaji


சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக்காவல் 43-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வழக்கில் தொடர்புடைய வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனு மீது 8ம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது