மாணவர் கொலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை! அமைச்சர் அன்பில் அதிரடி

 
a

திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோளூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்கிற 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.   வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்றவர் மதியம் பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்த போது மாணவர்கள் சிலர் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடி கொண்டு இருந்திருக்கிறார்கள்.

mnn

 அப்போது ஏற்பட்ட தகராறில் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். இதில் மூன்று மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை தாக்கி இருக்கிறார்கள். அப்போது நிலை தடுமாரி மரத்தில் முட்டி விழுந்த மவுலீஸ்வரன் படுகாயம் அடைந்து அலறித் துடித்திருக்கிறார்.  ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவர் மவுலீஸ்வரனை மருத்துவமனை கொண்டு சேர்த்தும்,  பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

 இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர் .

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.   அதில்,  ’’திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

an

 மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும்,  தமிழ்நாடு முதல்வர் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

 இந்நிகழ்வின் போது பணியில் கவனக்குறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.