சிறைக்குள் தூக்கமின்றி தவித்த நடிகை கஸ்தூரி...உணவை தவிர்த்ததாகவும் தகவல்
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி புழல் சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். முன்ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துாரி கைது செய்யப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி புழல் சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புழல் சிறைக்குள் தூக்கமின்றி தவித்த் நடிகை கஸ்தூரி, சிறை உணவை தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை எதுவும் சாப்பிடவில்லை என சிறை வட்டாரங்கள் தகவல்
தெரிவித்துள்ளன.