நீதிபதிகளை நோக்கி காலனியை வீசிய கருக்கா வினோத்!

 
karukka vinoth

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான கருக்கா வினோத் நீதிபதிகளை நோக்கி காலனியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். 

வழக்கு என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இறுதிக்கட்ட விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் காலணியை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.